t> கல்விச்சுடர் தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 May 2019

தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்!





நேற்று நடைபெற்ற நீட்தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் கூறிய நிலையில் வழக்கம் போல் தமிழக பாடத்திட்ட மாணவர்கள் கடினமாக இருந்ததாக கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் எம்பிபிஎஸ் லட்சியத்தில் உள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் நீட் தேர்வை எழுதினர். வழக்கம் போல் கடுமையான கெடுபிடிகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் கூட தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு தேர்வறைக்குள் முன்பு போல் கெடுபிடி காட்டப்படவில்லை என்று மாணவர்கள் கூறினர். இதனால் எந்த சஞ்சலமும் இன்றி நீட் தேர்வை எழுதியதாக தமிழக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தேர்வு தான் மிகவும் கடினமாக இருந்ததாக மாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.

இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சிரமமாக இருந்ததாக மாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் நீட் தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


JOIN KALVICHUDAR CHANNEL