t> கல்விச்சுடர் பி.எட் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 May 2019

பி.எட் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல்!

தமிழகத்தில் உள்ள 122 பி.எட்.ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் அங்கீகாாரம் பெற்று தமிழகத்தில் 736 கல்வியியல் கல்லூரிகள் பி.எட்., எம்.எட். பட்டப்படிப்பினை அளித்து வருகிறது. இந்த கல்லூரிகள் துவக்கப்படும் போது அதற்கான அங்கீகாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் கல்லூரிகள் அங்கீகார கட்டணத்தை செலுத்தாமல் தாெடர்ந்து இருந்து வந்தன.

இந்நிலையில் முன்னாள் துணைவேந்தராக இருந்த தங்கசாமி அங்கீகாரக் கட்டணத்தை செலுத்தாத கல்லூரிகள் கட்டணம் செலுத்துவதற்கு பலமுறை வாய்ப்பு வழங்கினார்.


அதன் அடிப்படையில் சில கல்வியியல் கல்லூரிகள் அங்கீகாரக் கட்டணத்தை செலுத்தின.

இருப்பினும் 122 பிஎட் கல்லூரிகள் ஆசிரியர் பல்கலைகழகத்திற்கு அங்கீகார கட்டணத்தை செலுத்தாததால் நடப்பாண்டில் இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர் பல்கலைகழகத்திற்கு அங்கீகார கட்டணமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

ஆனால் பல ஆண்டுகளாக 122 பி.எட் கல்லூரிகள் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாகவும், அபராத தொகையுடன் சேர்த்து பல கல்லூரிகள் 6 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் என்ற அளவில் கட்ட வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்121 கல்லூரிகளும் மே 5ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், தவறினால் அங்கீகாரத்தை தொடர முடியாத நிலை ஏற்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை அங்கீகார கட்டணம் செலுத்தப்படாத தால், 122 கல்லூரிகளிலும் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்காது என தகவல் வெளியாகியுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL