அண்ணா பல்கலைகழகம் மாணவர்கள் 2012-ஆம் ஆண்டு முதலான கல்வி சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றும் முறையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், இணையதளத்தில் உள்ள அசல் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து நகலாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி, வேலைவாய்ப்பில் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ள ஏதுவாக இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.