t> கல்விச்சுடர் பள்ளி செல்லா, இடை நின்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 May 2019

பள்ளி செல்லா, இடை நின்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதிட்டம் சார்பில் பள்ளி செல்லா, இடை நின்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி ஏப்.,8ல்துவங்கிமே 15 வரை நடைபெறுவதாகமுதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்தார்.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதிட்டம்சார்பில்6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடை நின்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி மே 15 வரை நடக்கிறது. இதில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், மற்றும் கல்வி தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,127 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் குடியிருப்பு வாரியாக கணக்கு கிராம கல்வி பதிவேடு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இக்கணக்கெடுப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2,525 குடியிருப்புகளில் எந்த ஒரு வீடும் விடுபடாதவாறு நடத்த வட்டார வள மைய மேற்பார்வையாளர்களால் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள கல்வியாளர்கள், ஊர் பெரியவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்களை பெற்றோர்களின் உதவியுடன் பள்ளிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடலோர பகுதிகள், செங்கல் சூளைகள், நரிக்குறவர் காலனிகள், அங்காடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இதில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து கணக்கெடுப்பை நடத்துக்கின்றனர், என்றார்.


JOIN KALVICHUDAR CHANNEL