. -->

Now Online

FLASH NEWS


Sunday 5 May 2019

'நீட்' தேர்வு அறைக்குள் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் என்ன?


நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு என்.டி.ஏ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வு நடத்தும் என்.டி.ஏ மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.






* நீட் இணையதளத்தில் உள்ள நேரமே அனைத்து தேர்வு மையங்களிலும் பின்பற்றப்படும்





* பிற்பகல் 1.30 மணிக்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.





* பிற்பகல் 1.30 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.





* பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும்.





* தேர்வு மையத்திற்குள் துண்டுத் தாள்கள், பென்சில் டப்பாக்கள், பர்சுகள், பேனா, அளவுகோல், எழுத்து அட்டை, அழிப்பான், லாக் புத்தகம், ஸ்கேனர் போன்றவற்றை எடுத்து வரக் கூடாது. மேலும் கால்குலேட்டர், பென்ட்ரைவ், கைப்பேசி, ப்ளூடூத், ஹியர்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த்பேண்ட் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளன.





* கை கடிகாரம், கை செயின், வாலட், கண்ணாடி, பெல்ட், தொப்பி போன்றவற்றை தேர்வு எழுதும் அறைக்குள் அணிந்துவரக்கூடாது. மேலும் மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், பேட்ஜ் உள்ளிட்டவையும் தேர்வு மையத்திற்குள் தடை செய்யப்பட்டுள்ளன.





* உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றிற்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை.





* அரைக்கை கொண்ட லேசான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். ஆடைகளில் பெரிய பொத்தான்களோ பேட்ஜ்களோ இருக்கக் கூடாது.











* கலாசாரம், நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்தினுள் இருக்க வேண்டும்.





* ஹீல்ஸ் அல்லாத செருப்புகளையே அணிய வேண்டும். ஷூக்கள் அனுமதிக்கப்படாது.





* ஆதார் போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.


*இன்று நீட்  தேர்வு எழுதும்.. மாணவ  மாணவியர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

1.  தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாக, தேர்வு மையங்கள் திறக்கப்படும். மதியம் 1.30க்குப் பின் எந்த மாணவரும் மையம் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, 1.15 மணிக்கு முன்னால் மாணவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்வது நல்லது. ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் இருக்கை அவர்களின் தேர்வு பதிவெண் ஒட்டப்பட்டு இருக்கும். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். 1.30க்குப் பின் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
2.  1.30 முதல் 1.45 வரையில் தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் அட்மிட் கார்ட் பரிசீலனை நடைபெறும்.
3.  மாணவரை அடையாளம் கண்டு உறுதிப்படுத்த மாணவர்கள் அவர்களிடம் அட்மிட் கார்ட், போட்டோ ஐ.டி. தர வேண்டும். அட்மிட் கார்ட் இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
4.  1.45க்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும். 1.50 முதல் 2.00 மணி வரை மாணவர் தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிய வேண்டும். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விடைத்தாள் தொகுப்பில் முன் பக்கம் எத்தனை பக்கங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அத்தனை பக்கங்கள் கொண்டுள்ளதா என்று சரி பார்க்க வேண்டும். இல்லை என்றால், அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
5.  வினாத்தாளில் உள்ள குறியீடும் விடைத்தாளில் உள்ள குறியீடும் ஒரே குறியீடு தான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
6.  விடைத்தாளில் 2.00 மணி முதல் 5.00 மணி வரை  விடைகளை எழுத வேண்டும். 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேறக் கூடாது. வெளியேறும் முன் விடை பதியப்பட்ட ஓ.எம்.ஆர். தாளைக் கொடுத்துச் செல்ல வேண்டும்.
7.  எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:
•        நீட் அட்மிட் பிரிண்ட் கார்ட்
•        விண்ணப்பத்தில் பதிந்த புகைப்படத்தின் அதே நகல்.
•        செல்லத்தக்க போட்டோ அடையாள அட்டை.
எடுத்துச் செல்லக் கூடாத பொருட்கள்.
•        அட்மிட் கார்ட் மற்றும் போட்டோ அடையாள அட்டை தவிர வேறு எந்த எழுது பொருளோ அல்லது சார்ந்தவையோ எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஜியோமெட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், எழுது அட்டை மற்றும் சார்ந்த எதற்கும் அனுமதி இல்லை. தேர்வு எழுத பால் பாய்ண்ட் பேனா ஒன்று வழங்கப்படும்.
•        மொபைல் போன், புளுடூத், பென் ட்ரைவ், பேஜர், ஹெல்த் பேண்ட், கை கடிகாரம், கைப்பை கேமரா, காதணிகள், வளையல்கள், ஆபரணங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.
•        அணிகின்ற ஆடை குறித்தும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மென்மையான நிறத்தில் ஆடை இருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மத சார்பான அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணியும் மாணவியர் ஒரு மணி நேரம் முன்னதாகத் தேர்வு அறைக்கு வந்து, ஆசிரியைகளின் சோதனைக்குள்ளாக வேண்டும்.
•        தேர்வு மையத்திற்குள்ளாக ஷூக்கள் அணியக் கூடாது. செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அவையும் ஹை ஹீல்ஸ் உள்ளதாக இருக்கக் கூடாது.
•        தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளர்கள் நேரத்தை தேர்வு தொடங்கும்போதும், நடுவிலும், முடியும்போதும்  அறிவிப்பார்கள். 
•        வருகைப் பதிவு தாளில், மாணவர்கள் தங்கள் விரல் ரேகைகளைப் பதிய வேண்டும்.

*வெளியூர் சென்று தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1.  வசிக்கும் ஊர் இல்லாமல் வேறு ஊர்களுக்கு தேர்வு எழுதச் செல்வதாக இருந்தால், அங்கு செல்ல போக்குவரத்து வசதிகள், பஸ், ட்ரெய்ன் கால நேரம் ஆகியனவற்றைத் தெரிந்து முதல் நாளே செல்ல வேண்டும். தங்கும் இடத்திலிருந்து தேர்வு மையம் செல்லும் வழியை அறிந்திருக்க வேண்டும். உதவிக்கு வருபவரிடம் முதல் நாள் தேர்வு மையம் சென்று வரச் சொல்ல வேண்டும். ஒரு தேர்வு மையத்தில் பல அறைகள் இருக்கலாம். எந்த அறையில் உங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை முதல் நாள் மாலை அல்லது தேர்வு அன்று காலையில் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இயலாத பட்சத்தில், தேர்வுக்கு 2 மணி நேரம் முன்னதாகச் சென்று இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
2.  மேலே தந்துள்ள அத்தியாவசிய ஆவணங்கள் (அட்மிட் கார்ட், போட்டோ, போட்டோ ஐ.டி. ஆகியவை) அனைத்தையும் எடுத்துத் தனியே ஒரு கவரில் வைத்து பத்திரப்படுத்த வேண்டும். மறுநாள் தேர்வு மையம் புறப்படுகையில் ஒருமுறை எடுத்துப் பார்த்து சரியாக உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
3.  நாம் படித்தது எல்லாம் மனதில் பதிந்திருக்கும். எனவே, திடீரென “ஐயோ நினைவில் இல்லையே” என்ற கவலையுடன் திடீரென புத்தகங்களைப் புரட்ட வேண்டாம். பதட்டமின்றி நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.
4.  பிற மாணவர்களுடன் கலந்து பேச வேண்டாம். உங்கள் மனதைக் குழப்பும் உரையாடலைத் தவிர்த்திடுங்கள்.
5.  தேர்வு எழுதும் அறையில் மற்ற மாணவர்களுடன் உரையாடுவதையோ, சைகை புரிவதையோ மேற்கொள்வது குற்றம். நீங்கள் அறையை விட்டு வெளியேற்றப்படலாம்.
6.  வினாத்தாளில் தகவல்களைப் பதியும் முன் ஓர் அரை நிமிடம் கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துப் பின் நிதானமாக தகவல்களை நிரப்பவும். முழுமையாக நிரப்பியவுடன் சரியாக உள்ளதா எனச் சரி பார்க்கவும்.
7.  முன்பே இந்தப் பகுதியில் கூறியபடி, பயாலஜி பாடப் பிரிவுகளில் உள்ள வினாவிற்கு முதலில் விடை அளிக்கவும். பின் பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி வினாக்களுக்குப் பதில் அளிக்கவும். இந்த இரண்டு பாடங்களிலும் பார்முலா வழியாக சிக்கல் தீர்க்கும் வினாக்கள் இருப்பதால், இவற்றிற்குக் கூடுதலாக நேரம் இதன் மூலம் கிடைக்கும்.

*நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும்  வாழ்த்துகள்.
🌷