. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 May 2019

மாணவர்களுக்கு தனிச் சேனல் மூலம் ரோபோடிக்ஸ் கல்வி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறைக்கு தனிச் சேனல் தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.





அதில் ,தேர்தல் முடிவுக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு தனிச் சேனல் தொடங்கப்படும்.இதன் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.





அரசுப் பள்ளிகளில் உள்ள 7000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.



வரும் கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்