t> கல்விச்சுடர் சுயவிவரங்களில் திருத்தம்: நீட் தேர்வர்களுக்கு வாய்ப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 May 2019

சுயவிவரங்களில் திருத்தம்: நீட் தேர்வர்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) எழுதியவர்கள், தங்களது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தவறான சுயவிவரங்களை குறிப்பிட்டிருந்தால் அவற்றை மே 31-ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.


தந்தை பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும், வேறு தகவல்களை மாற்ற முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.


நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சுயவிவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்வதற்காக இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக என்டிஏ விளக்கமளித்துள்ளது.

சுயவிவரங்கள் சரிபார்ப்பு மற்றும் திருத்தங்களை https://
ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx என்ற இணையதள முகவரியில் மேற்கொள்ளலாம்.


JOIN KALVICHUDAR CHANNEL