t> கல்விச்சுடர் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 June 2019

ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

மாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணி அடுத்த வாரம் தொடங்கும். 



அதன் பின்னர் 11 வகையான பயிற்சி, வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம்  நியமிக்கலாம்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


JOIN KALVICHUDAR CHANNEL