t> கல்விச்சுடர் புதியதாக தொடங்கப்பட்டுள்ள துவக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணி ஒதுக்க வேண்டும் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 June 2019

புதியதாக தொடங்கப்பட்டுள்ள துவக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணி ஒதுக்க வேண்டும்

புதியதாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட வேண்டுமென கிருஷ்ணகிரியில் நடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக் கிளை செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரக்கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஹென்றிபவுல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவி மரியசாந்தி, கூட்டுறவு சங்கத் தலைவர் டேவீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கேஜி வகுப்புகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நிரவல் முன்னுரிமையுடன் மாறுதல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களுக்கு பணி மாறுதலில் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும். 25 சதவீதம் தனியார் பள்ளிக்கு இடஒதுக்கீடு செய்வதால், அரசு பள்ளிகள் பாதிக்கப்படுவதை எண்ணி, அதை கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.மேலும், நிறுத்தி வைத்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்; வட்டாரக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களின் குறைகளை களைய ஏற்படுத்தப்பட்ட ஜமாபந்தியின்போது கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு அந்தந்த மாதத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். புதியதாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். வட்டார செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் அனுராதா நன்றி கூறினார். 


JOIN KALVICHUDAR CHANNEL