t> கல்விச்சுடர் அரசு தேர்வுத் துறைக்கு இயக்குநர் தேடல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 June 2019

அரசு தேர்வுத் துறைக்கு இயக்குநர் தேடல்



தமிழக பள்ளி கல்வியில், தேர்வுத் துறை இயக்குநரின் பதவிக் காலம், வரும், 30ம் தேதி முடிகிறது. புதிய அதிகாரியை நியமிக்க, பள்ளி கல்வித் துறை பட்டியல் தயாரித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அரசு தேர்வுத் துறை இயக்குநரகத்தின் இயக்குநராக உள்ள, வசுந்தராதேவி, மார்ச், 31ல் ஓய்வு வயதை எட்டினார்.ஆனால், பொதுத் தேர்வு நடத்துவது, தேர்வு முடிவு வெளியிடுவது போன்ற காரணங்களால், அவரின் பணிக் காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், தேர்வுத் துறை இயக்குநருக்கான பணிக் கால நீட்டிப்பும், 30ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிப்பு பணிகளை, பள்ளி கல்வித் துறை துவங்கியுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL