t> கல்விச்சுடர் சுற்றுச்சூழல் கல்வி: தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 June 2019

சுற்றுச்சூழல் கல்வி: தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி

உலக இயற்கை நிதியம் அமைப்பு சார்பில் 15 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி குறித்த பயிற்சி முகாம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் உலக இயற்கை நிதியம் அமைப்பு இணைந்து மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த கல்வி அளிக்கும் திட்டத்தை வகுத்துள்ளது.
இதன் தொடக்கமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15 அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி குறித்த பயிற்சி முகாம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்விப் பிரிவு இயக்குநர் ராதிகா சூரி கலந்துகொண்டு சுற்றுச்சூழல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

இதுகுறித்து உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15 அரசுப் பள்ளி ஆசியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கையேடும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் செயல்முறை திட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்த உள்ளோம். 
ஆண்டுக்கு ஒருமுறை பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த திருவிழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


JOIN KALVICHUDAR CHANNEL