. -->

Now Online

FLASH NEWS


Friday 21 June 2019

School Morning Prayer Activities 21.06.2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.06.19








திருக்குறள்


அதிகாரம்:ஈகை

திருக்குறள்:222

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

விளக்கம்:

நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

பழமொழி

Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

இரண்டொழுக்க பண்புகள்

1. பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது வயதானவர்கள் அல்லது முடியாதவர்கள் நின்று கொண்டு இருந்தால் கண்டிப்பாக எழும்பி இடம் கொடுப்பேன்.

2. நம் நாட்டின் பொது சொத்துக்களை காப்பது என் கடமை எனவே என்னாலோ என் நண்பர்களாலோ அழிவு நேராதவாறு காப்பேன்.

பொன்மொழி

வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு அடியும் சுவை, வளர்ச்சி, போட்டி, வெற்றி, தோல்வி  என வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
பயணத்தின் நோக்கம் இலக்கை அடைவதில் தான் இருக்க வேண்டும் ...
----- ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

 பொது அறிவு

ஜூன்21-இன்று சர்வதேச யோகா தினம்.

1. யோகா முறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 பதஞ்சலி முனிவர்

2.யோகாசனங்கள் எத்தனை வகைப்படும்?

 72 வகைப்படும்

English words & meanings

*Joey - a baby kangaroo. கங்காரு குட்டி

*Jeweler - a person who makes jewels with gold, silver and platinum, நகை செய்பவர்

ஆரோக்ய வாழ்வு

அதிகாலையில் குளிர்ந்த நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.

Some important  abbreviations for students

*RAM - Random Access Memory    

 *WWW - World Wide Web

நீதிக்கதை

ஒரு குறிப்பிட்ட ஊரில் பல சிறப்புகளை கொண்ட சுவையான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதைப் புசித்தால் நெடுநாளைக்கு பசியே எடுக்காது என்றும் முந்தின ஊரில் சூஃபி ஞானிக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால், அந்த ஊருக்குப் போன அவருக்கு, காய்கனி சந்தையில் அந்தப் பழம் கண்களில் படவில்லை. தயங்கியபடியே பார்த்துக்கொண்டு வந்தார்.

அவருடைய தயக்கத்தை பார்த்த ஓர் இளைஞன், அவரிடம் வந்தான். “நீங்கள் எதையோ தேடுவதுபோல தெரிகிறது. நான் உங்களுக்கு உதவலாமா?” என்று கேட்டான்.

அவனிடம் “இந்த ஊரில் அபூர்வமான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதை உட்கொண்டால் சில நாட்கள் வரை பசியே எடுக்காது என்றும் சொன்னார்கள். அந்தப் பழம் கிடைத்தால் அல்லது அதன் விதை கிடைத்தால் அதை எடுத்துப் போய் பட்டினியால் வாடும் மக்கள் உள்ள பகுதியில் பயிரிட முயன்று அந்தப் பகுதி மக்களின் பசியைப் போக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று பதில் சொன்னார் ஞானி.

இளைஞன் உடனே பரபரத்தான். “சற்று இருங்கள், வருகிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனான். சிறிது நேரம் கழித்து வந்தான். அவன் கையில் ஒரு பழம். “நீங்கள் கேட்ட பழம் இதுதான், இந்தாருங்கள்” என்று சொல்லி அதை ஞானியிடம் கொடுத்தான்.

“இந்த ஊரில் இந்தப் பழம் நிறையவே கிடைக்கும் என்று சொன்னார்களே” என்று கேட்டார் ஞானி.

“உண்மைதான். இந்த ஊரில் இந்த பழம் நிறையதான் கிடைத்துக்கொண்டு வந்தது. ஆனால், மக்கள் சுயநலமிகள் ஆகிவிட்டார்கள். தாம் அனுபவிக்கும் பலனை பிற யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற சுயநல நோக்கில் இந்தப் பழத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பயிரிடும் முறையையும் மிக ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். என் வீட்டில் இருந்த ஒரு பழத்தை உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக இந்தப் பழத்தை நீங்கள் பயன்படுத்த போவதாக சொன்னதைக் கேட்டதும் உங்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது” என்று சொன்னான் அந்த இளைஞன்.

அவனுடைய செயலாலும், சொற்களாலும் நெகிழ்ந்த ஞானி, அவனை வாழ்த்தினார்: “உன்னைப் போல பிறருக்காக உதவ முன்வரும் இளைஞர்கள் பெருகினார்களானால், அவர்கள் வாழும் பகுதியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது.

வெள்ளி

சமூகவியல் & விளையாட்டு


* நமது சூரிய குடும்பத்தில் புதன் தான் மிக சிறிய கிரகம் ஆனால் பூமியின் துனைக்கோளான சந்திரனை விட சற்று பெரிதாக இருக்கும்.
* இது தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள (பூமியின் கணக்குப்படி) 59 நாட்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் சூரியனை வெறும் 88 நாட்களில் சுற்றிவந்துவிடும்.

ஆடலாம்! விளையாடலாம்!
பாரம்பரிய விளையாட்டு - 2

ஒரு குடம் தண்ணி ஊத்தி...







 இவ்விளையாட்டின் நன்மைகள்:

*ஒழுங்குணர்வு ஏற்படுகிறது.
*ஒற்றுமை பெருகுகிறது.
*பிரச்சனையில் சிக்கிக் கொண்ட நண்பரை காப்பாற்றும் எண்ணம் வளர்கிறது.
*இளம் சிறார்களுக்கு எண்ணுதல் செயல் எளிதாகிறது.
 *சுற்றுச்சூழலை பேணிக்காக்க நீர் ஊற்றி செடிகளை வளர்த்தலின் அவசியம் பாடலாக மனதில் பதிகிறது.
*மன மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

இன்றைய செய்திகள்

21.06.2019

* சர்வதேச யோகா தினம் - பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்.

* பருவ மழை பெய்து கண்டலேறு அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தொட்டால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு சாத்தியம் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

* நெல்லையில் நடைபெற்று வந்த தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.

* உலக கோப்பை கால்பந்து தொடர்களில் 17 கோல்கள் அடித்து பிரேசில் வீராங்கனை மார்னா சாதனை படைத்துள்ளார்.

* உலக கோப்பை கிரிக்கெட் : பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Today's Headlines

🍁International Yoga day - it's adviced to all the schools to do yoga.

🍁If there is monsoon and if the Kandaleru Dam reaches 7 tmc then only it's possible to open water to Tamil Nadu said Andra Pradesh officials.

🍁 The work that is undergoing in Nellai which is to make a library on Tamil medicine is at the end.

🍁In The World Cup Football League the Brazil Player Ms. Marna scored 17goals and made a world record.

🍁 World cup cricket : Australia won by 48 runs against Bangladesh.

Prepared by
Covai women ICT_போதிமரம்