t> கல்விச்சுடர் பள்ளி வேலை நேரத்தில் வெளியே சென்ற 11 ஆசிரியருக்கு நோட்டீஸ் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 July 2019

பள்ளி வேலை நேரத்தில் வெளியே சென்ற 11 ஆசிரியருக்கு நோட்டீஸ்



பணி நேரத்தில் வெளியே சென்ற, காரிமங்கலம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், 11 பேரிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, 59 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

கடந்த, 24ல் காலை, 11:00மணியளவில், இடைவெளி நேரத்தில் வெளியில் டீ சாப்பிட சென்ற ஆசிரியர்கள், வெகு நேரமாகியும் பள்ளிக்கு வரவில்லை. இந்நிலையில், அங்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி வந்துள்ளார். அப்போது அவர், ஆய்வில் ஈடுபட்டபோது ஆசிரியர்கள், 11 பேர் வெளியில் சென்றிருப்பது தெரியவந்தது.


JOIN KALVICHUDAR CHANNEL