. -->

Now Online

FLASH NEWS


Saturday 13 July 2019

புதிய கல்விக் கொள்கை : வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம்-பள்ளிக்கல்வித்துறை


புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.





மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது.





இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.





இதனால் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கம் செய்தது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்.

இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் 25ம் தேதி வரை கருத்துகளை அனுப்பலாம் .மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு கருத்துகளை அனுப்பலாம். http://www. tnscert.org.in என்ற இணையதளத்தில் கருத்துகளை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது.