. -->

Now Online

FLASH NEWS


Monday 1 July 2019

பிஇ பொதுப்பிரிவுக்கான கவுன்சலிங் அட்டவணை வெளியீடு: தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

பொறியியல் (பிஇ) படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் 3ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த கவுன்சலிங் 3ம் ேததி தொடங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவ மாணவியர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட கவுன்சலிங் கடந்த 25ம் தேதி தொடங்கியது.அதில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், தொழிற்கல்வி பிரிவினர் ஆகியோருக்கான கவுன்சலிங் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்குகிறது.

இந்த கவுன்சலிங்கின் முதல் சுற்றில் 200 கட்ஆப் முதல் 178 வரை கட்ஆப் எடுத்தவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக 9872 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3ம் தேதி முதல் 10ம் வரை ஆன்லைன் மூலம் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும். பின்னர் 8ம் தேதி முதல் 10ம் வரை அவர்கள் கல்லூரிகளை தெரிவு செய்து அதை லாக் செய்ய வேண்டும். 11ம் தேதி அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும். 12ம் தேதிக்குள் அந்த அட்டவணையில் உள்ளபடி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். பின்னர் 13ம் தேதி அவர்களுக்கான கல்லூரிகள் உறுதி செய்யப்படும். அதற்கு பிறகு இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் 177.75 முதல் 150 வரை கட்ஆப் எடுத்தவர்களில் 9873 வரிசை எண்ணுக்கு பிறகு 30926 எண்வரை அழைக்கப்படுவார்கள். இப்படி மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கவுன்சலிங் நடத்தப்பட்டு 28ம் தேதி முடியும். இதில் 101692 மாணவ மாணவியர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.