. -->

Now Online

FLASH NEWS


Thursday 25 July 2019

திறனாய்வு தேர்வில் தேர்வாகும் மாணவ,மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையை அதிகரிக்க தமிழக முதலமைச்சர்,கல்வி அமைச்சருக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை...

ஊரக திறனாய்தேர்வில் தேர்வாகும் மாணவ,மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையை  அதிகரிக்க  வேண்டும் என கல்வியாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தமிழக முதல்வருக்கும் ,கல்வி அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தமிழக முதல்வருக்கும் கல்வி அமைச்சருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:அரசுப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஊரக திறனாய்வுத் தேர்வு என்னும் பெயரில் தேர்வு வைத்து, அதில் தேர்வாகும் மாணவ மாணவியரில் மாவட்டத்திற்கு 50 மாணவிகள், 50 மாணவர்கள் என 100 நபர்களுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை 1991 ம் ஆண்டு அரசாங்கம் அமல் செய்தது. 

அத்தேர்வை எழுதுவதற்கான வருமான வரம்பை அப்பொழுது ஆண்டுக்கு ரூ 12000 ஆயிரம் என நிர்ணயித்தது. கிட்டத்தட்ட இத்திட்டம் செயல்படத் தொடங்கி 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,
வருமான வரம்பும் 12 ஆயிரத்திலிருந்து ரூ 1 லட்சமாக உயர்ந்து விட்ட சூழலில் மாணவர் எண்ணிக்கை இன்னும் 100 என்னும் அதே நிலையில் இருப்பதும், ஊக்கத்தொகையும் ஆண்டுக்கு  இன்னும் அதே ஆயிரம் ரூபாயிலேயே இருப்பதும் வருத்தத்திற்குரியதாக இருக்கின்றது.

தமிழகக் கல்வித்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில்,
28 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நிச்சயமாக மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது கல்விவளர்ச்சிக்கு உதவிடவும் மாவட்டத்திற்கு 100 என்பதை 250 ஆகவும், 
ரூ 1000 என்பதை ரூ 5000 ஆகவும்  உயர்த்தித்தர வேண்டும் என தமிழக முதல்வருக்கும், கல்வி அமைச்சருக்கும்  கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்  சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.