. -->

Now Online

FLASH NEWS


Wednesday 28 August 2019

School Morning Prayer Activities 29.08.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.08.19





திருக்குறள்


அதிகாரம்:தவம்

திருக்குறள்:270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

விளக்கம்:

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

பழமொழி

A willful man will have his own way

 தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பானாம்

இரண்டொழுக்க பண்புகள்

1. நன்றி, மன்னித்து கொள்ளுங்கள் என்ற இரண்டு வார்த்தைகளும் என் உள்ளத்தின் நிலையை காண்பிக்கும் மற்றும் என் பண்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

2. எனவே அவற்றை நான் எப்பொழுதும் பயன்படுத்த முயல்வேன்.

பொன்மொழி

நேரம் என்பது யாராலும் ஆளமுடியாத மாபெரும் சக்தி. குறித்த செயலை குறித்த நேரத்தில் முடிப்பவனே சாதனையாளன் ஆகிறான் ..

----மாவீரன் நெப்போலியன்

பொது அறிவு

1.அஜந்தா குகையில் மொத்தம் எத்தனை குகைகள் உள்ளன?

 29 குகைகள் உள்ளது.
 
2. இந்தக் குகைகளை கண்டுபிடித்தவர் யார்?

 ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேயர். 28 ஏப்ரல் 1819 ஆம் ஆண்டு

English words & meanings

Enzyme : a biological catalyst speed up the chemical reaction
நொதியம். இது ஒரு புரதப் பொருளாகும். உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி ஆகும்.

Emperor - a great king or ruler of an empire
பெரிய நாட்டை ஆளும் பேரரசர்.

ஆரோக்ய வாழ்வு

அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம் . ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

Some important  abbreviations for students

UTV - Utility Track Vehicle 

VHF  - Very High Frequency

நீதிக்கதை

ஆந்தை பெற்ற சாபம்

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது.

நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள்.

ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர்.

அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.

நீதி :
பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.

வியாழன்

அறிவியல் & கணினி

ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது தன் நேர்கோட்டுப்பாதையை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு, ‘ஒளிவிலகல்' எனப்படும்
இதை நாம் கீழ்கண்ட சோதனை மூலம் நிரூபிக்கலாம்.







தேவையான பொருட்கள்

நீர் நிரம்பிய கண்ணாடி டம்ளர் மற்றும் பென்சில்
செயல் முறை

பென்சிலை நீரில் வைக்கும் போது அது வளைந்தது போல தோன்றும்.

காரணம்
ஒளி காற்று ஊடகத்திலிருந்து நீர் ஊடகத்திற்குச் செல்வதாகும்.

கணினி சூழ் உலகு

7-ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள இணையச் செயல்பாடுகள் (4, 5 & 6) குறித்த காணொலி

இன்றைய செய்திகள்

29.08.2019

☘நிலவின் 3வது சுற்றுவட்டப் பாதையை அடைந்தது சந்திரயான்-2.

☘சதாப்தி, தேஜஸ் ரெயில்களில் 25 சதவீத கட்டண குறைப்பு செய்ய ரெயில்வே துறை  முடிவு செய்துள்ளது.

☘ சென்னையில் பல பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

☘பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம் செய்துள்ளார்.

☘7000 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் புரிந்த லண்டன் வாழ் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட் 85 வயதில் ஓய்வை அறிவித்தார்.

Today's Headlines

🌸Chandrayaan-2 another step closer to Moon, enters new lunar orbit of 3.

🌸Indian Railway decided to reduce the price of 'Sathapthi and Tejas' by 25%.

🌸A sudden break in the weather and chennai experienced heavy rain with strong winds.

🌸 For the post of chief coach for Pakistan Cricket Team Cricketer Misbah-Ul-hag.

🌸West Indies Fast Bowler Cecil Wright who lives in London Announces Retirement at 85.

Prepared by
Covai women ICT_போதிமரம்