t> கல்விச்சுடர் நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு 900 பள்ளிகள் - நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 'பணி ஆசிரியர்' என, கருதப்படுவர் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 September 2019

நிர்வாக ஒருங்கிணைப்பிற்கு 900 பள்ளிகள் - நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 'பணி ஆசிரியர்' என, கருதப்படுவர்




தமிழகத்தில், 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர், இனி, 'பள்ளி முதல்வர்' என, அழைக்கப்படுவர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது. இவ்வாறு ஒருங்கிணைத்த பின், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 'முதல்வர்' என்றழைக்கப்படுவர். இது குறித்து, அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள் குறித்து, விபரம் சேகரிக்கப்பட்டது.



மாநில அளவில், 800 - 900 மேல்நிலைப் பள்ளிகள், இந்த பட்டியலில் இடம் பெறும் என, கல்வித்துறை அலுவலர்களின் முதல் கட்ட கணக்கெடுப்பில் அறியப்பட்டு உள்ளது. விரைவில், ஒருங்கிணைந்த பள்ளிகளுக்கு முதல்வராகும், தலைமை ஆசிரியர் குறித்த விபரத்தை, பள்ளி கல்வித்துறை வெளியிட உள்ளது.

இவ்வாறு முதல்வர் பொறுப்பு ஏற்பவர், தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்குவது, தேர்வு நடத்துவது, சூழலுக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது உள்ளிட்ட பணிகள், ஒதுக்கப்பட உள்ளன.அதே நேரம், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 'பணி ஆசிரியர்' என, கருதப்படுவர்.


JOIN KALVICHUDAR CHANNEL