t> கல்விச்சுடர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க ஒன்றியம் ஒதுக்கீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 September 2019

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க ஒன்றியம் ஒதுக்கீடு








ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து எஸ்இஆர்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்இஆர்டி) கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும்.

அதில் குறைகள் இருந்தால் உரிய நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முதல்வரும், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களும் ஒரு ஒன்றியத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் நான்கு வேலை நாட்கள் அல்லது மாதத்தில் 16 பள்ளிகளை பார்வையிட வேண்டும். கற்றல் உள்ளிட்ட பணிகளில் குறை ஏதாவது இருந்தால் வேறு நபர்களை அனுப்பி வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும். ஒவ்ெவாரு மாதமும் 5ம் தேதிக்குள் நிறுவன முதல்வர்கள் பள்ளிப் பார்வையின் தொகுப்பு அறிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எஸ்இஆர்டி இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பாடப்புத்தகங்களில் பிழைகள் இருந்தால் அதுகுறித்து ஆசிரியர்களிடையே கலந்தாலோசித்து அது தொடர்பான விவரங்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் லட்சக்கணக்கானோர் பெயிலானார்கள். எனவே, ஆசிரியர் பள்ளி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவே இந்த உத்தரவை பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


JOIN KALVICHUDAR CHANNEL