t> கல்விச்சுடர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்புப் போட்டி: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 September 2019

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்புப் போட்டி: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்










தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (என்டிஆர் எஃப்) தலைவர் விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை பெங்களூரு வில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியதாவது:

இந்திய பொறியாளர் மையத் தின்(ஐஇஐ) கீழ் செயல்படும் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு பொன்விழா ஆண்டை எட்டியுள்ளது. இதை யொட்டி, பொறியாளர்கள், மாண வர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அந்த வகையில், 'ஸ்பேஸ் கிட்ஸ்' இந்தியா நிறுவனத் துடன் இணைந்து பள்ளி மாணவர் களுக்கு தேசிய அளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்புப் போட்டி நடத்தப்படுகிறது.

புதுமையான வடிவமைப்பு, செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படும் செயற்கைக்கோள்கள், 2020-ல் ஏவப்படும்.

விமானங்கள் வானில் பறக்கும் போது பறவைகள் மோதி சேதம் ஏற்படுவதை தடுப்பது குறித்து வரும் டிசம்பரில் தேசிய கருத் தரங்கம் நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து விமானவியல் கட்டமைப்புகளில் முப்பரிமாண அச்சுக் கலையை பரவலாக்குவது தொடர்பாக விப்ரோ நிறுவனத்துட னும் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி திட்டங்களை ஊக்குவிக் கும்பொருட்டு அலையன்ஸ் கல்விக் குழுமத்துடனும் என்டிஆர் எஃப் ஒப்பந்தம் செய்துள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL