t> கல்விச்சுடர் மாணாக்கர்களின் விளையாட்டு நேரங்களை அபகரிக்கும் பள்ளிகள்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 September 2019

மாணாக்கர்களின் விளையாட்டு நேரங்களை அபகரிக்கும் பள்ளிகள்!



சிபிஎஸ்இ அமைப்புடன் இணைக்கப்பெற்ற பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு, விளையாட்டிற்கென்று ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரங்கள், இதர பாட ஆசிரியர்களால் எடுத்துக்கொள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தங்களின் பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய வேண்டுமென்ற காரணத்தை முன்வைத்து இப்படி விளையாட்டை கபளீகரம் செய்துகொள்கின்றனர் பாட ஆசிரியர்கள்.

இந்த கல்வியாண்டின் துவக்கத்தில், சிபிஎஸ்இ அமைப்பு, தனது இணைப்புப் பெற்ற அனைத்துப் பள்ளிகளும், ஒரு நாளில் குறைந்தது 1 பாடவேளையை விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டுமென கூறியிருந்தது. இதேபோன்று தமிழ்நாடு கல்வித்துறையும் ஒரு வாரத்திற்கு 2 மணிநேரங்களை விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டுமென பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், சில பள்ளிகள்தான் இந்த அறிவுறுத்தலை முறையாகப் பின்பற்றுகின்றன என்று கூறப்படுகிறது. அதேசமயம், பள்ளிகளின் இந்தப் போக்கில் பல பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது.

அவர்கள் தங்களின் பிள்ளைகள், ஒதுக்கப்பட்ட விளையாட்டு நேரங்களில் முறையாக விளையாட வேண்டுமென்றே விரும்புகிறார்கள் என்று கள ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL