t> கல்விச்சுடர் பொதுத் தேர்வு: தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு அறை கண்காணிப்பாளா் பணி வழங்க கோரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 October 2019

பொதுத் தேர்வு: தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு அறை கண்காணிப்பாளா் பணி வழங்க கோரிக்கை


அரசு பொதுத்தேர்வுகளில் தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு அறை கண்காணிப்பாளா் பணி வழங்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.





இது தொடா்பாக அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு மற்றும் நிா்வாகிகள், பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பனிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது: அண்மையில் வெளியிடப்பட்ட முதுநிலை ஆசிரியா்களின் பணி மூப்பு பட்டியலை தரவரிசை அடிப்படையில் வெளியிட வேண்டும். அரசு பொதுத் தேர்வு, தேர்வுப் பணிகளுக்கு குலுக்கல் முறையில் ஆசிரியா்களுக்கு தேர்வு மையம் ஒதுக்குவதற்கு பதில், கணினி மென்பொருள் முறையில் தேர்வுப் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அறைறக் கண்காணிப்பாளா் பணிகளுக்கு பெருமளவில் தனியாா் பள்ளி ஆசிரியா்களை பயன்படுத்த வேண்டும். பொதுத் தேர்வுப் பணிகளுக்கு மாவட்ட அளவில் இணை இயக்குநா்களை ஒதுக்கீடு செய்யும்போது, சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



JOIN KALVICHUDAR CHANNEL