t> கல்விச்சுடர் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை அறிவிப்பு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

9 October 2019

தீபாவளிக்கு பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை அறிவிப்பு!




அக்.,26,27ல் பள்ளிகளுக்கு  தீபாவளி விடுமுறை என்றும் அக்.,28ம் தேவைப்பட்டால் உள்ளூர் விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்.,28ல் பள்ளி வேலை நாள் என்பதால், விடுமுறை தேவைப்படும் பள்ளிகள் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று விடுமுறை அளிக்கலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அக்டோபர் 28ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL