. -->

Now Online

FLASH NEWS


Tuesday 19 November 2019

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2019 T.தென்னரசு



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்-978

அதிகாரம் : பெருமை

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

மு.வ உரை:

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

கருணாநிதி  உரை:

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஒளியும் இருளும் ஒரே இடத்தில் இருக்க முடியது. அது போல சுய நலமும் , தெய்வத் தன்மையும் இணைந்திருக்க முடியாது.
- சுவாமி விவேகானந்தர்.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்

வீட்டுக்கு வீடு வாசப்படி  !!

பொருள்:

ஒவ்வொரு வீட்டுக்கும் ஓவ்வொரு பிரச்னை இருக்கும்.

உண்மையான பொருள்:

மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும்  வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1.   Almond tree- வாதுமை மரம்
2.   Areca tree- பாக்கு மரம்
3.   Babool tree- வேல மரம்
4.  Bamboo- மூங்கில் மரம்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. நாணய உலோகம் எனப்படுவது எது ?

தாமிரம்

2. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி தமிழ்நாட்டில் எங்குள்ளது ?

காவலூர் (வைனு பாப்பு வானாய்வகம்)


📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை - அது என்ன ?

மரம்

2.ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை அது என்ன ?

குடை

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

வாழை

பயன்கள்

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.

வாழைப்பழம் அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது.

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை.

வாழை இலையில் சூடான உணவுப்பொருளை உண்ணும்போது , இலையில் உள்ள பாலிபீனால் நமது உணவுக்கு கூடுதல் சுவை கிடைக்கிறது. தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

முடவனைச் சுமந்தவள்

தாரா எனும் நகரத்தில் சத்தியவிரதன் என்ற ஒரு வேதியன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவன் மனைவி அருகில் இருப்போரிடம் சண்டையும் கலகமும் செய்து கொண்டிருந்ததால், அந்த வேதியன் வேறு நகரத்திற்குச் சென்றான்.

செல்லும் வழியில் அவளுக்குத் தண்ணீர் தாகம் எடுக்க அவனிடம் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டாள். அவன் தண்ணீர் கொண்டு வர வேகமாகச் சென்றான். ஆனால் அவனால் வெகு நேரம் கழித்தே தண்ணீர் கொண்டு வர முடிந்தது. அதற்குள் அவள் இறந்து விட்டாள்.

வேதியன் அழுது புலம்பினான். அப்போது வானில், உன் வயதில் இவளுக்குப் பாதியைக் கொடுத்தால் இவள் மீண்டும் உயிர் பெறுவாள் என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே அவன் அவ்வாறே தருவதாகத் தன் மனதில் நினைத்துக் கொண்டான். அவள் உயிர் பெற்றாள். பின்னர் அவள் அவன் கொண்டு வந்த தண்ணிரைப் பருகிவிட்டு பயணத்தைத் தொடரலானார்கள்.

ஓரிடத்தில் அவளைத் தங்க வைத்து விட்டுக் கடைக்குச் சென்றான் வேதியன். தனியாக இருந்த அவளிடம் ஒரு முடவன் தவழ்ந்து வந்தான். அவன் இனிமையாகப் பாடினான். அவன் பாட்டில் மயங்கிய இவள் அவனுடன் இணைந்தாள்.

திரும்பி வந்த வேதியன் தனது மனைவியின் அருகில் ஒரு முடவன் இருப்பதைப் பார்த்து, வேதியனுக்கு முடவன் மீதும் தன் மனைவி மீதும் எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. இவனையும் நம்முடன் அழைத்துச் செல்லலாமா? என்று கேட்டாள். வேதியனும் சம்மதித்து மூவரும் புறப்பட்டனர்.

செல்லும் வழியில் வேதியன் ஒரு கிணற்றின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது அவள் வேதியனை அந்தக் கிணற்றில் தள்ளிவிட்டு விட்டு அந்த முடவனை ஒரு பெட்டிக்குள் அமரச்செய்து தன் தலையில் அவனைச் சுமந்துகொண்டு சென்றாள். வழியில் சென்ற காவலாளிகள், தலையில் பெட்டியுடன் செல்லும் அவளைச் சந்தேகப்பட்டு, ராஜாவிடம் அழைத்துச் சென்றனர்.

ராஜாவிடம், இவர் என் கணவர். இவரால் நடக்க முடியாது. மனைவி என்ற முறையில் இவரை நான் தானே பாதுகாக்க வேண்டும்! என்றாள். இவளின் கற்புத் தன்மையைக் கண்டு கண் கலங்கிய ராஜா, அவளைத் தன் உடன் பிறந்தவளாகக் கருதி அவளையும் முடவனையும் அரண்மனையில் தங்க வைத்து உபசரித்தார்.

கிணற்றில் தள்ளி விடப்பட்ட வேதியன் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த வழிப்போக்கன் தண்ணீர் தாகம் ஏற்பட அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருக நினைத்துக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். கிணற்றுக்குள் இருந்த வேதியனைக் கண்டு, அருகிலிருந்த ஆட்களை அழைத்து கிணற்றில் குதிக்கச் சொல்லிக் காப்பாற்றினான். பின்னர் வேதியன் தன் மனைவியையும் அந்த முடவனையும் தேடிச் சென்றான்.

அரண்மனை மாடத்திலிருந்த வீதியில் செல்லும் வேதியனைப் பார்த்த அவனது மனைவி, அரண்மனைக் காவலர்களிடம் சென்று, அதோ அந்த வேதியன், என்னையும் முடமாகவுள்ள என் கணவரையும் கொல்ல வருகிறான் என்று கூறினாள்.

அவர்கள் வேதியனைப் பிடித்து ராஜாவின் முன் நிறுத்தினர். ராஜா நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார். வேதியனைத் தீர விசாரித்த நீதிபதி உண்மையை அறிந்து கொண்டு, ராஜாவிடம் கூறினார். ராஜா வேதியனை விடுவித்து, வேதியனின் மனைவியையும், முடவனையும் தண்டித்தார்.

நீதி :
நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தலைநகர் டெல்லியில் சில இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

🔮தமிழகத்தில் புதிய 5 மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேரில் தொடங்கி வைக்க உள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தது: தமிழக அரசு.

🔮கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடற்கரையோரம் கடல் மட்டம் 8.5 செ.மீ. உயர்ந்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் பாபுல் சுப்ரியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

🔮டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், டொமினிக் திம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

🔮காஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்.

🔮யு-17 உலக கோப்பை கால்பந்து: 4வது முறையாக பிரேசில் சாம்பியன்.

HEADLINES

🔮 Rajya Sabha passes the Jallianwala Bagh National Memorial (Amendment), Bill.

🔮Billionaire Mukesh Ambani’s Reliance Jio on November 19 said it will increase mobile phone call and data charges in the next few weeks.

🔮Houston police honour fallen Indian-American policeman, change dress code policy for Sikh personnel.

🔮During the South-west Monsoon, 2019, a number of States and Union Territories are reported to have been affected by floods,” Union Minister of State for Home said in the Lok Sabha.

🔮World Cup qualifiers | A struggling India finds itself in a do-or-die situation against Oman.

🔮Beware! Centre says IT Act empowers it to lawfully intercept messages.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪