. -->

Now Online

FLASH NEWS


Friday 22 November 2019

எல்எல்பி பட்டம் பெற்று 21 வயதில் நீதிபதியானார் : ராஜஸ்தான் இளைஞருக்கு பாராட்டு


ஜெய்ப்பூர்: 21 வயது இளைஞர் ஒருவர் ராஜஸ்தான் நீதிமன்றம் ஒன்றின் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயதான மயங்க் பிரதாப் சிங், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்எல்பி சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வை எதிர்கொண்ட அவர், அந்த தேர்வில் வெற்றிபெற்றார். இதனையடுத்து 21 வயதிலேயே நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

அவர் விரைவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, மயங்க் பிரதாப் சிங்குக்கு கிடைக்கவுள்ளது. நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்த நிலையில், ராஜஸ்தான் அரசாங்கம் இந்த ஆண்டுதான் வயது வரம்பை 21 ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது. குறைந்த வயதில் நீதிபதியாக தேர்வான மயங்க் பிரதாப் சிங், வரும் ஏப்ரல் மாதம் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரை அம்மாநில மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Source: Dinakaran