t> கல்விச்சுடர் 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வை நினைத்து மாணவர்கள், பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: செங்கோட்டையன் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 November 2019

5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வை நினைத்து மாணவர்கள், பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: செங்கோட்டையன்


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ள பொதுத் தேர்வை நினைத்து மாணவர்களும், பெற்றோரும் அச்சமடைய வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. வேறு எந்த காரணமும் அல்ல. அதே சமயம், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், பொதுத் தேர்வால் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். ஒரு சில பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் இருந்தால் மட்டும் அங்கு தேர்வு நடத்த முடியாது. அருகில் இருக்கும் பள்ளிகளில் சேர்த்து தேர்வு நடைபெறும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


JOIN KALVICHUDAR CHANNEL