. -->

Now Online

FLASH NEWS


Sunday 24 November 2019

விநாயகா மிஷன் கல்லுாரிக்கு சர்வதேச ஐ.எஸ்.ஓ., தரச்சான்று


விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு சர்வதேச ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் சேலத்தில் உள்ள விநாயகா மிஷனின் அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரிகளுக்கு ஐ.எஸ்.ஓ., 21001 : 2018 தரநிலை மேலாண்மை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழாவில் சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டி பேசினர்.இதுபற்றி விநாயகா மிஷன்ெஹல்த் அலைடு சைன்ஸ் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் கூறியதாவது:இந்தியாவில் தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியா அமைப்பானது கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆராய்ந்து தர சான்றிதழை வழங்குகிறது. இதன் மூலம் அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் சிறந்த கட்டமைப்பு, செயல் முறைகள், செயல் திட்டங்கள், பாடப்பிரிவுகள், பயிற்றுவிக்கும் முறை மற்றும் மாணவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வழிமுறைகள் போன்றவற்றை ஆராய்ந்து சர்வதேச தர நிலை மேலாண்மை சான்றிதழ் வழங்கியுள்ளது.இந்தியாவிலேயே தரச் சான்றிதழ் பெற்ற ஒரே முதல் கல்வி நிறுவனம் இதுவே. இதன் மூலம் சிறந்த கல்வியை வழங்குவதிலும், மேம்படுத்துவதிலும் அலைடு ெஹல்த் சயின்ஸ் சிறந்து விளங்குகிறது என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது என்றார்.