. -->

Now Online

FLASH NEWS


Wednesday 27 November 2019

ஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக எழும் குற்றச்சாட்டுகளை தவிர்க்க வழிமுறைகள்!!






 









1.ஆசிரியர்கள் காலை 8:30 முதல் 10:30 வரையிலும் அசிரியர் & மாணவர் ஆன்லைன் வருகைப்பதிவேடுகளில்  நேரம் செலவிடுவதை வெளியிலிருந்து பார்போருக்கு அப்படிதான் தெரியும். எனவே ஆன்லைன் ஆப் மூலம் வருகைப்பதிவேடு முறையை தவிர்க்கலாம் அல்லது சர்வர் குறைபாட்டை நீக்கி விரைவாக செயல்படச் செய்யலாம்.


2.பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் மட்டுமே (கைபேசி ஆப் நிறுத்தப்பட்டு) வருகைப்பதிவேடு செய்ய ஆவன செய்யலாம். இணைய வசதி பள்ளியில் செய்து தரும் பட்சத்தில் ஆசிரியர்கள்தங்கள் கைப்பேசியை, மொபைல் இண்டர்னெட் வசதியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.


3.துறை ரீதியான அறிவிப்புகள் வழிகாட்டுதல்கள் மற்றும் நெரிமுறைகளை EMIS தளத்தின் மூலம் மட்டுமே பகிரப்பட வேண்டும், அல்லது பள்ளி ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்


4. அலுவலக அறிவிப்புகள் வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படுவது நிறுத்தப்பட்டு, வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்.


5.மாணவர்களின் வருகையை கண்காணிக்க விரல் ரேகை பதிவேடு முறையை நடைமுறைப்படுத்த அரசிற்கு ஏற்படும் நிதிச் செலவைக் குறைக்க மொபைல் ஆப் பயன்படுத்த சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.


6. EMIS தளத்தில் தரவுகளை உள்ளிடுதல் data entry works வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர்களைக் கொண்டு செய்து முடிக்கலாம் அல்லது , தற்காலிக data entry operator பணியிடங்களை தோற்றுவிக்கலாம்.


7. பள்ளியிலேயே இணைய வசதி செய்து அனைத்து ஆன்லைன் பணிகளையும் மடிக்கணினி மூலம் மட்டுமே அனுமதிக்கும் பட்சத்தில் ஆசிரியர்களின் கைப்பேசி உபயோகம் முழுமையாக குறைக்கப்படும்.


8. கற்றல் கற்பித்தல் TLM , பயிற்ச்சித்தாள்கள், கையேடுகள் , மாதிரி வினாத்தாள்கள் போன்றவை பல ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களால், சமூக வலைதளங்களின் மூலம் பகிரப்படுகின்றன, அவற்றை தொகுத்து முறைப்படுத்தி அரசின் அதிகாரப்பூர்வமான தளங்கள் மூலம் பகிரலாம், ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் இன்றியமையாததாகும்