. -->

Now Online

FLASH NEWS


Tuesday 26 November 2019

தலைமை பண்பு பயிற்சி முகாம்:தலைமையாசிரியர்கள் பங்கேற்பு


மாவட்ட அளவில் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி, உடுமலை, திருப்பூர் ரோட்டிலுள்ள ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்ததுஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை திறம்பட நடத்த ஏதுவாக, தலைமைப்பண்பை வளர்த்துக் கொள்ளும் வகையில், தலைமை ஆசிரிருக்கான பயிற்சி முகாம் சென்னையில் இரு மாதங்களுக்கு முன் நடந்தது.ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், 3 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள் மூலம் மாவட்ட வாரியாக உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கும் பயிற்சி வழங்கப்படும் என, ஏற்கனவே கல்வித்துறை அறிவித்திருந்தது.இந்நிலையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் தலைமைப்பண்பு பயிற்சி முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது. வரும் 29ம் தேதி வரை நடக்கிறது.மணக்கடவு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வீகன், பாப்பாங்குளம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார், குமார்நகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காயத்ரி ஆகியோர் தலைமை ஆசிரியருக்கு பயிற்சி வழங்கினர்.மணக்கடவு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வீகன் கூறுகையில், பள்ளி மேலாண்மையை திறம்பட நிர்வகித்தல், பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணுதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பெற்றோர் - ஆசிரியர் கழகத்துடன் ஒருங்கிணைந்து வழிநடத்துதல், தலைமைப்பண்பு மூலம் பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.அடுத்த, 3 ஆண்டுகளுக்குரிய பள்ளி வளர்ச்சி திட்டத்தினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தயாரித்து வழங்கினர், என்றார்.ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, உளவியல் ஆலோசகர் மொகைதீன் ஆலோசனை வழங்கினார்.