t> கல்விச்சுடர் இடைவேளையின்போது பாம்பு நடனமாடிய ஆசிரியர்கள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 November 2019

இடைவேளையின்போது பாம்பு நடனமாடிய ஆசிரியர்கள்



ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பில் பாம்பு நடனத்தை ஒருங்கிணைத்த ஆசிரியை ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாநிலத்தின் ஜலோரில் நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியை என 3 பேர் இடைவேளையின் போது பாம்பு போல வளைந்து நெளிந்து ‘நடனமாடினர்.


இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இது சர்ச்சையானதை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையின் பேரில் நடனத்தை ஒருங்கிணைத்த ஆசிரியை ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
மேலும் நடனமாடிய 2 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக  மாவட்ட கல்வி அலுவலர் அசோக் ரோஷ்வால் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆசிரியை மீதான ‘சஸ்பெண்டு’ நடவடிக்கைக்கு பல்வேறு அரசு துறையை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

JOIN KALVICHUDAR CHANNEL