. -->

Now Online

FLASH NEWS


Sunday 1 December 2019

30.11.2019 அன்று நடைபெற்ற CEO அவர்களின் கூட்ட அறிவுரைகள்








தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.

30.11.2019 அன்று நடைபெற்ற CEO அவர்களின் கூட்ட அறிவுரைகள்

இத்தகவல்களை உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி கையொப்பம் பெற்று வைக்கப்பட வேண்டும். கீழ்க்கண்ட அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

1. காலை இறைவணக்கக் கூட்டத்திற்கு முன்பு 15 நிமி. மற்றும் பள்ளி நேரம் முடிந்த பின்பு 45 நிமிடங்கள் மாணவர்களுக்கு கூட்டு உடற்பயிற்சி, Sports, இசை, பாட்டு, நடனம், விளையாட்டு போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.

2. காலை மாலை இடைவேளையின்போது 1 நிமி. ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் அனைவரும் தண்ணீர் அருந்த வேண்டும் (1 நிமி). தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னரே Restroom அனுப்ப வேண்டும். (இடைவேளை 10 நிமிடம் தான்)

3. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் CRC ஒருங்கிணைப்பாளர்கள் (HS/HSS, HMs) பள்ளியைப் பார்வையிட்டு வருகை, தரம் சோதிக்க வேண்டும்.  ஒரே வளாகத்தில் இயங்கும் பள்ளிகளில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பின் Acting Teacher அனுப்பவேண்டும்.

4. 2.12.2019 முதல் EMIS மூலம் Student Attendence, Staff attendence முழுமையாக பதிவு செய்யாதவர்கள் பெயர்ப் பட்டியல் அனுப்பப்பட்டு, அன்று மாலை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும்.
(Partially Marked, Not Marked வரவே கூடாது).

5. சத்துணவு SMS கட்டாயம் அனுப்பப்பட வேண்டும்.

6. EMIS -ல் Time Table வாரந்தோறும் update செய்ய வேண்டும்.

7. EMIS ONE App - ல் உள்ள TNTP கட்டாயம் பயன்படுத்தி Videos, Pictures, TLM பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.  அதேபோல் DIKSHA app பயன்படுத்தியும் கற்பிக்க வேண்டும். மாணவர்களையும் பயன்படுத்தச் சொல்லவும். (எந்த ஆசிரியர் எத்தனை முறை பயன்படுத்தியுள்ளார் என்ற விபரம் கண்காணிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்).

9. சமுதாய பங்களிப்பு நிதி CSR portal மூலம் பள்ளியின் தேவைகளை upload செய்தால் Donors நிதியளிக்கவுள்ளனர். தேவைகளைப் பதிவிடவும். (IT-80G பிரிவின்கீழ் வரிச்சலுகைப் பெறலாம்).

10. ஆதார் இல்லாத குழந்தைகளுக்கு BRC யைத் தொடர்பு கொண்டு எடுக்கவும்.

11. அனைத்து ஆசிரியர்களுக்கும் Smart Card வழங்கப்படவுள்ளதால் EMIS - ல் உள்ள ஆசிரியர் விவரங்களை சரிபார்க்கவும். புதிய photo பதிவேற்ற வேண்டும்.

12. தினமும் தேர்வு 30 மதிப்பெண்களுக்கு வைத்து, திருத்தி, பெற்றோர் கையொப்பம் பெறப்படவேண்டும். இதில் சுணக்கம் இருக்கக் கூடாது.

* பள்ளிப் பார்வையின்போது சில பள்ளிகளில் த.ஆ.கூட்டத் தகவல்கள் மற்றும் HM WhatsApp Group செய்திகள் உதவி ஆசிரியர்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை எனத் தெரியவருகிறது.
இது தவிர்க்கப்பட வேண்டும்.

* EMIS ONE app இன்னும் install செய்யாமல் இருந்தால் நாளைக்குள் செய்து, திங்கள் முதல் நமது ஒன்றியம் 100% Staff attendence, Student attendenc, Noon Meal SMS முடித்துவிட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

த.ஆ.மற்றும் உ. ஆ. இருவரும் install செய்து பதிவு செய்யவும். இதில் யாருக்காவது ஒத்துழைப்பு இல்லை எனில் சார்ந்த வ.க.அலுவலரைத் தொடர்புகொள்ளவும்.