. -->

Now Online

FLASH NEWS


Sunday 1 December 2019

மாணவர் மன அழுத்தம் போக்க பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


''பள்ளி இறை வணக்க கூட்டத்துக்கு முன், மன அழுத்தத்தை போக்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் யூனியனில், 31 திட்டப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது: வீட்டில் இருந்து வெவ்வேறான சூழ்நிலைகளில், மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருகின்றனர். ஓடியும், வேகமாகவும், சாப்பிடாமலும், மன அழுத்தத்தோடு வருவார்கள். இதை குறைக்க பயிற்சி அளிக்கப்படும். இறை வணக்க கூட்டத்துக்கு முன், 15 நிமிடங்கள் ஒதுக்கி, மன அழுத்தத்தை போக்க பயிற்சி அளிக்கப்படும். வகுப்பறை சூழலுக்கு தகுந்தவாறு, மாணவ, மாணவியரை தயார்படுத்தவே, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை உயர்த்த, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சரளமாக ஆங்கிலம் பேச, வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இதேபோல் ஐந்து முதல், ஒன்பதாம் வகுப்பினருக்கும் பயிற்சி தரப்படும். இதற்காக புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.