. -->

Now Online

FLASH NEWS


Sunday 1 December 2019

காற்றுக்கு தமிழில் எத்தனை பெயர்கள் உள்ளது தெரியுமா?


தெற்கிலிருந்து வீசினால் - தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் - வாடை
கிழக்கிலிருந்து வீசினால் - கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் - மேலை
உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. இந்த
உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும்!
அ. திசையைப் பொருத்து காற்றின் பெயர்கள்:

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று

மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
ஆ. 6கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று'

6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று 'இளந்தென்றல்'
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று 'தென்றல்'
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று 'புழுதிக்காற்று'
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று 'ஆடிக்காற்று'
100 கி.மீ வேகத்தில் வீசும் காற்று 'கடுங்காற்று'
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று'

120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று 'சூறாவளிக் காற்று
வேறு மொழிகளில் காற்றுக்கு இத்தகைய பிரிவுகள் உள்ளன
இதுதான் தமிழின் சிறப்பு.