t> கல்விச்சுடர் ஆசிரியர் வருமானத்தை கண்காணிக்க முடிவு: வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க கல்வித் துறை உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 December 2019

ஆசிரியர் வருமானத்தை கண்காணிக்க முடிவு: வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க கல்வித் துறை உத்தரவு





ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றில் சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம் படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டுகிறது.

கற்றல் பணிவிவர தின பதிவேடு, சொத்து விவரம், பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வழியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆசிரியர்கள் வைத்துள்ள அனைத்து வங்கி கணக் குகள் மற்றும் பான் கார்டு விவ ரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக எமிஸ் இணையதளத்தில் பிரத் யேக வசதிகள் செய்யப்பட்டுள் ளன. இந்த பணிகளை விரை வாக முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் வரு மானம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


JOIN KALVICHUDAR CHANNEL