நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக முருகேசன், 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார். அப்பள்ளி மாணவி ஒருவருக்கு முருகேசன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நேற்றிரவு (டிச.,03) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆசிரியரின் கைதுக்கு எதிராக பிற மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பள்ளியில் மரம் வெட்டியது தொடர்பாக முருகேசனுக்கும் அப்பள்ளிக்கும் பிரச்னை இருந்து வந்ததாகவும், அதற்கு பழித்தீர்க்க மாணவி ஒருவரின் மூலம் தவறான புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆசிரியர் மீது தவறில்லை எனவும் போராட்டம் நடத்திய பெற்றோர்கள் கூறுகின்றனர்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||