. -->

Now Online

FLASH NEWS


Monday 6 January 2020

காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2020 T.தென்னரசு


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 450

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 
 நல்லார் தொடர்கை விடல்.

பொருள்:

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

இதைச் செய்வது நமது கடமையாகும் என்று தெரிந்து செய்வதுதான் ஒழுக்கம். அச்சத்தாலும் பலவந்தத்தாலும் செய்யும் செயல் ஒழுக்கமாகாது.
 - மகாத்மா காந்தி

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Be just before you are generous

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1. Eve - பெண் ஆடு
2.  Excursion - சுற்றுலா
3. Expense - செலவு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. நின்றபடியே தூங்கும் பிராணி எது ?

 குதிரை

2. கழுதைப் பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம் எது?

 இராஜஸ்தான்


✡✡✡✡✡✡✡✡
Daily English

1. He loves animals and he knows all about them
2. Let us pray to the Almighty for peace.
3. There are trees along the river bank.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

இலந்தைப் பழம்

🍊 இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம்.

🍊 இலந்தையின் தாயகம் சீனா ஆகும்.

🍊 இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடிய, வெப்பமண்டல மரமாகும்.

🍊தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் இலந்தை மரம் அதிகமாக வளர்கிறது.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஒரு நாள் பெண்ணொருத்தி அவரிடம் வந்தாள். சுவாமி திருமணமான எனக்கு மழலைச் செல்வம் இல்லை என்றாள். தீட்சிதர் கை நிறைய கொத்துக் கடலையைக் கொடுத்து, அம்மா கொஞ்ச நேரம் ஆகட்டும். நான் உன்னைக் கூப்பிடும் வரை அந்தக் கதவு அருகில் உட்கார் என்றார். 

அவளும் அப்படியே உட்கார்ந்து கடலையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை அவளிடம் வந்து, எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று கை நீட்டியது. ஆனால், அவளோ, தரமாறுத்துவிட்டாள். உனக்கு கொடுத்தால் மற்ற குழந்தைகளும் வந்து கேட்கும் என்றாள். போய்விடு, என்று விரட்டி விட்டாள். 

இதைக் கவனித்த தீட்சிதர் அவளைக் கூப்பிட்டார். அவளும் வேகமாக எழுந்து சென்றாள். அவளிடம், உனக்கு குழந்தையே பிறக்காது, என்றார், தீட்சிதர். மேலும், என்ன மனசு உனக்கு இனாமாகப் பெற்ற கடலையில் இருந்து ஒரு குழந்தைக்கு கொஞ்சம்கூட கொடுக்க மனமில்லையே அன்பு இல்லாத உனக்கு ஆண்டவன் எப்படி குழந்தை வரம் தருவார், என்றார், தீட்சிதர். 

அவள் தலைகுனிந்து நின்றாள். அன்பு செலுத்த தெரியாதவர் கடவுளிடம் அன்பை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது, கடவுள் கொடுத்ததெல்லாம் நமக்கே சொந்தம் என்று சுயநலத்துடன் வாழ்வதில் அர்த்த இல்லை. நம்மிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ்வதுதான், நம் உண்மையான சந்தோஷம் என்று கூறி ஆண்டவன் அருளால் அனைத்தும் நல்லதாய் நடக்கும் என்றார். 


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் எதிரொலி : இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.

🔮பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

🔮நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா.

🔮அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை.

🔮ரூ.132 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.

🔮கன்னியாகுமரி பூம்புகாா் படகுதளத்தில் ரூ. 2 கோடி செலவில் படகு நிறுத்தம் தளம் அமைக்கும் பணிகள் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

HEADLINES

🔮Delhi polls on Feb. 8, counting of votes on Feb. 11.

🔮25 crore people likely to participate in nationwide strike on Jan 8.

🔮Tamil Nadu will protect all citizens regardless of religion, creed, says Governor.

🔮PM Narendra Modi meets top business honchos to talk jobs, growth amid economic slump.

🔮Nine-judge SC bench to hear case of allowing women of all ages in Sabarimala temple on January 13.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴