t> கல்விச்சுடர் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் RSS குறித்த தவறான தகவல் நீக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 January 2020

10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் RSS குறித்த தவறான தகவல் நீக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை


10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ். குறித்த தவறான வாசகம்  நீக்கப்படுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவ்வமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், சுதந்திரத்திற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை நீக்கவும் கோரியிருந்தார். 


இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட வாசகங்கள் புத்தகங்களில் இருந்து நீக்கப்படும் என்றும் ஏற்கெனவே வழங்கப்பட்ட புத்தகங்களில் அந்த வாசகங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உறுதியளித்தது. இதனை ஏற்ற நீதிபதி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

JOIN KALVICHUDAR CHANNEL