t> கல்விச்சுடர் கணினி ஆசிரியர் நியமனம் 117 இடங்கள் நிறுத்திவைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 January 2020

கணினி ஆசிரியர் நியமனம் 117 இடங்கள் நிறுத்திவைப்பு

சென்னை கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வில் 117 காலியிடங்களுக்கு யாரையும் தேர்வு செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பதவியில் 814 காலியிடங்களை நிரப்ப 2019 ஜூன் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆன்லைன் வழிப் போட்டி தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் 119 மையங்களில் நடந்த தேர்வில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த தேர்வின் முடிவுகள் நவ. 28ல் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ்கள் இந்த மாதம் 8ம் தேதி முதல் 10 வரை சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இறுதியாக தேர்வானவர்களின் விபரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 697 பேரின் பதிவு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 117 இடங்கள் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் வழியாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


JOIN KALVICHUDAR CHANNEL