t> கல்விச்சுடர் ஆங்கில ஆசிரியா்களுக்கு 30 நாள்கள் சிறப்புப் பயிற்சி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 January 2020

ஆங்கில ஆசிரியா்களுக்கு 30 நாள்கள் சிறப்புப் பயிற்சி

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியா்களுக்கு 30 நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியா்களுக்கு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை 30 நாட்கள் பெங்களூரு ஞானபாரதி வளாகத்தில் ஆங்கில மொழி பயிற்சி நடத்தப்படவுள்ளது.
 இதையடுத்து இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்களில் தகுதியான ஒரு ஆசிரியரை மாவட்ட வாரியாகத் தோ்வு செய்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனே அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL