t> கல்விச்சுடர் வகுப்பறை வெற்றி எது ? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 January 2020

வகுப்பறை வெற்றி எது ?




🐂 ஒரு பால்விற்பவர்  தன் பசுவை  இழுத்துக் கொண்டு  சாலையோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு திடீரெனப் பிடிவாதமாக  நடுச் சாலையில் சென்று  அமர்ந்து கொண்டது.
அகலம் குறைந்த அந்தச் சாலையில்  மிதிவண்டி, , இருசக்கர வாகனம்  தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு சாலையின் நடுவில்  படுத்திருந்தது. பால்காரர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தப் பசுவை அணுவளவு கூட  நகர்த்த முடியவில்லை.
அவ் வழியாக ஒரு காவல்துறைக் காவலர்  நடந்து வந்து கொண்டிருந்தார். பால்காரரின் இயலாமையைக் கண்டு அவருக்கு உதவ முற்பட்டார்.. தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த  உருட்டுப் பிரம்பையும்  வைத்து மிரட்டிப்பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை.
அப்போது  அவ்வழியாக வந்த பனிக்கூழ் விற்பவர்  ஒருவர் பசுவிடம் குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன.
மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த ஒரு வீரன் அந்த வழியாக வந்தான். . ஒரு பசுவை சாலையிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தான்.. மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டுத் தானே  தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தான். பசு அசையவில்லை.

💪🏼அந்த வழியாக ஒரு பள்ளிச்சிறுவன் வந்தான். அவன்  சாலையருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்துக் கட்டாகக் கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான். பசு புல்லைச் சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.

💢தங்கள் பலங்களையும் அதிகமாகப் படித்து விட்ட அறிவுப் புலமையையும்   காட்டி கற்றல் நிகழ்வுகளை வெற்றியாக்க வகுப்பறையில்  சிலர் முனைகிறார்கள்.
ஆனால் சில எளிய நிகழ்வுகளில் தான் கற்றல் தானாகவே உருவாகிறது என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.
உளவியலை மையப்படுத்திய மாணாக்கரின் வாழ்வுப்பின்புலம் நன்கறிந்த ஆசிரியரால் மட்டுமே அந்த சிறுவனைப் போன்று மாணாக்கரைத் தன்வசப்படுத்த முடியும்..

JOIN KALVICHUDAR CHANNEL