t> கல்விச்சுடர் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பு பெயர், விபரம் கேட்கிறது கல்வித்துறை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 January 2020

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பு பெயர், விபரம் கேட்கிறது கல்வித்துறை

அகில இந்திய வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுப்பு எடுக்கவுள்ள ஆசிரியர்களின் விபரங்களை கல்வித்துறை சேகரிக்கிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுதல் உள்ளிட்ட, சில கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவிலான வேலை நிறுத்த போராட்டம், வரும் 8ம் தேதி நடக்கிறது. போராட்டத்துக்கு சில ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் பொங்கல் பண்டிகை விடுமுறை வரவுள்ளது. பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாற்று ஏற்பாடுக்கு, கல்வித்துறை திணற வேண்டியிருக்கும்.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ விடுப்பு அல்லாமல் வேறு காரணங்களுக்கு, விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பட்டியல் திரட்ட, முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL