. -->

Now Online

FLASH NEWS


Saturday 25 January 2020

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் கொண்டாடுவதில் உள்ள ஐந்து வித்தியாசங்களை தெரிந்து கொள்வோமா...???


*🇮🇳வித்தியாசம் 1 :

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவு 00:00 மணிக்கு அன்று பிரிட்டீஷ் படைகள் இந்தியாவிற்கு சுதந்திரத்தை அறிவித்து வெளியேறியதை அடுத்து அன்றைய நாளை சுதந்திர தினமாக இந்தியா கொண்டாடுகிறது....

*26 ஜனவரி 1950 காலை 10:18 மணிக்கு நம் நாடு குடியரசு நாடாக (தன் நாட்டின் தலைவனை - அரசனை மக்கள் தேர்ந்தெடுக்கும் நாடாக) அறிவிக்கபட்டது...அன்று தான் நம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை டாக்டர் B R அம்பேத்கர் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தார்...அதனால் இந்த நாளை குடியரசு தினமாக நாம் கொண்டாடுகிறோம்....

*🇮🇳வித்தியாசம் 2 :

தேசிய அளவில்
*ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் நாட்டின் *பிரதம மந்திரி கொடியை ஏற்றுவார்....
*குடியரசு தலைவர் மாலையில் ரேடியோவில் மக்களிடம் உரையாற்றுவார்....

*26 ஜனவரி அன்று டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்

*🇮🇳வித்தியாசம் 3 :

மாநிலங்கள் அளவில்
ஆகஸ்ட் 15 அன்று மாநில முதல்வர் கொடியேற்றுவார்....
26 ஜனவரி அன்று மாநில கவர்னர் கொடியை பறக்கவிடுவார்....

*🇮🇳வித்தியாசம் 4 :

மக்கள் அளவில்
ஆகஸ்ட் 15 அன்று நாம் கொடி கம்பத்தில் கொடியை கீழிருந்து மேல் ஏற்றி கொடியின் முடிச்சை அவிழ்த்து கொடியை பறக்க விட வேண்டும்....இதற்கு Flag Hoisting - கொடி ஏற்றுதல் என கூறப்படும்....
ஜனவரி 26 அன்று நாம் கொடி கம்பத்தில் கொடியேற்றும் சமயம் கொடியை கீழிருந்து மேல் ஏற்ற கூடாது.... அதனை முன்னரே நாம் செய்து கொள்ள வேண்டும்,
வெறும் கொடியின் முடிச்சை அவிழ்த்து கொடியை பறக்க விட வேண்டும்....இதற்கு Flag Unfurling - கொடி பறக்கவிடுதல் என கூறப்படும்....

*குறிப்பு :பெரும்பாலும் நாம் இதனை பின்பற்றுவதில்லை....இதனை சரியாக பின்பற்றுவோம்

*🇮🇳வித்தியாசம் 5 :

ஆகஸ்ட் 15 அன்று நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களை பற்றி பேசுவோம்....
குடியரசு தினத்தன்று நம் நாட்டின் ஜனநாயம் பற்றியும், நாட்டின் சட்ட திட்டங்களை பற்றியும், நாட்டின் வரலாறு, நாட்டின் நிகழ்காலம் - எதிர்காலம் பற்றியும் பேசுவோம்.....