t> கல்விச்சுடர் பயன்படுத்தாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யுங்கள் - ரிசர்வ் வங்கி உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 January 2020

பயன்படுத்தாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யுங்கள் - ரிசர்வ் வங்கி உத்தரவு

பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யும் படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்று திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு ஆளுக்கு ஒரு டெபிட் கார்டை வங்கிகள் கொடுத்துவிட்டன. வங்கிக் கணக்கை வைத்து என்ன செய்வது என்று கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அதைப் பயன்படுத்துவதே இல்லை. மினிமம் பேலன்ஸ் வைத்தில்லை என்று கூறி கிராமப்புற மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டது.


இந்த நிலையில், இதுவரை பயன்படுத்தப்படாத டெபிட் மற்றும் டெபிட் கார்டுகளை ரத்து செய்துவிடும்படி ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் புதிய வழிகாட்டுதலை அனுப்பியுள்ளது.
இப்படி கார்டுகள் ரத்து செய்யப்பட்டால் மீண்டும் தேவை எனில் அவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி சமீபத்தில் அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் மேக்னட் ஸ்டிரிப்புக்கு பதில் சிப் அடிப்படையிலான தாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனால், ஒரு முறை கூட பயன்படத்தாத கார்டுகளைக் கூட வங்கிகள் மாற்றித் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது இந்த புதிய உத்தரவு மூலம் ஒரு முறை கூட பயன்படுத்தப்படாத கார்டுகள் நீக்கப்பட்டு, பயன்படுத்திய கார்டுகளுக்கு மட்டும் சிப் அடிப்படையிலான கார்டுகள் வழங்கப்படும். இதன் மூலம், ஆன்லைன் மோசடிகள் தவிர்க்கப்படும் என்று நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL