t> கல்விச்சுடர் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கக்கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 January 2020

சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கக்கோரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூரில் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்ககோரி, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில், 10 ஆண்டுகள் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்தும், 20 ஆண்டு பணிபுரிகிறவர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. ஆனால், கரூர் வட்டாரத்தில், 40 ஆசிரியர்களுக்கு கடந்த, ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்தவிதமான அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட கிளை சார்பில், வட்டார தலைவர் அருள் குழந்தை தேவதாஸ் தலைமையில், 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி நேற்று மாலை, 6:00 மணிக்கு கரூர் வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் இருந்த வட்டார கல்வி அலுவலர் சந்திரிகா, கோரிக்கைளை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL