. -->

Now Online

FLASH NEWS


Thursday 27 February 2020

10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

சென்னை, நடப்பாண்டுக்கான பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத இருக்கின்றனர். 


இதுதவிர 62 சிறைவாசி தேர்வர்களும் தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். 


இதற்கான தேர்வு முடிவு வருகிற ஏப்ரல் மாதம் 24-ந்தேதி வெளியாக உள்ளது.அதற்கு அடுத்தபடியாக, பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வருகிற 4-ந் தேதி தொடங்கி, 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 85 ஆயிரத்து 867 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 252 மாணவிகளும் எழுதுகின்றனர். 


இதுதவிர 100 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம்(மார்ச்) 27-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 13-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதை 4 லட்சத்து 74 ஆயிரத்து 844 மாணவர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 155 மாணவிகளும், 7 திருநங்கைகளும் எழுத இருக்கின்றனர். இதுதவிர 144 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். 

இந்த தேர்வு முடிவு மே மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.ஆக மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை மாணவர்கள் மற்றும் சிறைவாசி தேர்வர்கள் என மொத்தம் 25 லட்சத்து 87 ஆயிரத்து 790 பேர் எழுத உள்ளனர்.அனைத்து தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இதற்கான தேர்வு கட்டுப்பாட்டு அறையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.இந்த கட்டுப்பாட்டு அறை தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். 


9385494105, 9385494115, 9385494120 ஆகிய எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் தேர்வு அறையில் எப்படி இருக்க வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், அதனை மாணவ-மாணவிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்து இருக்கிறது.