. -->

Now Online

FLASH NEWS


Tuesday 11 February 2020

அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளும், தங்களின் மாணவர் சேர்க்கை கையேட்டை, இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்

 'அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளும், தங்களின் மாணவர் சேர்க்கை கையேட்டை, இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும். கையேட்டை பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது' என, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்து உள்ளது.


வரும், 2020 - 21ம் கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாட்டு பணிகளை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும், ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங், கட்டடக்கலை, மருந்தியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் செயல்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்த, புதிய நிபந்தனைகளை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டு உள்ளது.

இந்த விதிகளை பின்பற்றி, இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெறும் கல்லூரிகள், 15 மாணவர்களுக்கு, ஒருவர் என்ற விகிதப்படி, பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இதுவரை, 20 மாணவர்களுக்கு, ஒரு பேராசிரியர் என்ற, விகிதாச்சாரம் இருந்தது ஒவ்வொரு கல்லூரியும், இ.சி.எஸ்., எனப்படும், 'ஆன்லைன்' வழி சம்பள வினியோக ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு மாநிலமும், இன்ஜினியரிங் படிப்புக்கான கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளும், தங்களின் மாணவர் சேர்க்கை கையேட்டை வைத்து, வசூல் வேட்டை யில் ஈடுபடக் கூடாது. மாணவர் சேர்க்கை கையேட்டை, ஒவ்வொரு கல்லூரியும், தங்கள் இணையதளத்தில் இருந்து மாணவர்கள், இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., கூறிஉள்ளது.