t> கல்விச்சுடர் கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு - புதிய நடைமுறைகளை வகுத்து அரசாணை வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 February 2020

கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு - புதிய நடைமுறைகளை வகுத்து அரசாணை வெளியீடு



கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் குறித்த புதிய விதிமுறைகளுடன் கூடிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், மருத்துவக் காரணங்களுக்காக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் மற்றும் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கான புதிய நடைமுறைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருணை அடிப்படையிலான வேலைக்கு குறைந்தபட்ச வயது 18ஆகவும், அதிகபட்சம் 50ஆகவும் நிர்ணயித்த தமிழக அரசு, அரசு ஊழியர்கள் இறப்பு நிகழ்ந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கருணை அடிப்படையிலான பணிகள் c&d பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க, மறைந்த அரசு ஊழியர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்கும் கீழ் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL