. -->

Now Online

FLASH NEWS


Saturday 29 February 2020

அரசுப் பள்ளிகளில் ''ஹைடெக் லேப்'' வசதி வரும் கல்வியாண்டில் முழுமையாக அமல்




அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கணினித் திறனை மேம்படுத்த,ஹைடெக் - லேப் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்ததும், உயர்க்கல்விக்கு செல்லும் போது, அதற்கான நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகள், அலுவலகப் பணிகள் பெரும்பாலும், கணினி சார்ந்தவையாகவே உள்ளன. இதனால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கணினிப் பயிற்சியை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ஹைடெக் - லேப்) அமைக்கும் பணி துவங்கியுள்ளது. உயர்நிலைப்பள்ளிகளில், 11 கணினிகளும், மேல்நிலைப்பள்ளிகளில், 21 கணினிகளும் வழங்கப்பட உள்ளன. கடந்த மாதம், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணினி வழியில் திறன் சோதனை தேர்வுகள் நடத்தப்பட்டன. புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாடம் சார்ந்த விரிவாக கூடுதல் தகவல்களுக்கு, க்யூஆர் கோடு என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை மாணவர்கள் கணினி வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.பாடவாரியாக, எளிமையான முறையில் பதிவேற்றம் செய்து புரிந்து கொள்வது, ஆன்லைன் தேர்வு குறித்த தெளிவுகளை பெறுவது என பல வகைகயில் மாணவர்களுக்கு, ஹை டெக் லேப்பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்கேற்ப, ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு, இரண்டு பாட வேளை, கணினி சார்ந்த வகுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கால அட்டவணை தயார் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.