. -->

Now Online

FLASH NEWS


Thursday 6 February 2020

மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்க வந்துவிட்டது பள்ளிகளில் லாக்கர் வசதி



மேற்கு வங்கத்தில் மாணவர்கள் சுமந்துவரும் புத்தக சுமையை குறைக்க அந்நாட்டு அரசு புது திட்டம் ஒன்று கொண்டுவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் லாக்கர் வசதி விரைவில் தொடங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
மாணவர்களின் சுமைகளை எளிதாக்கும் வகையில், அவர்கள் தினமும் கொண்டு வரும் புத்தகங்கள், எழுதுபொருட்கள் அனைத்தும் தினமும் வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் லாக்கரில் சேமித்து வைக்கும்படியான புது வசதியை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இது, மத்திய அரசு நடத்தும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதலில் தொடங்கப்படும்.
நர்சரி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும். மேலும், மாணவர்கள் பள்ளிக்குச் சுமந்து வரும் புத்தக பையின் சுமையிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.
தற்போது நிதி நெருக்கடி காரணமாக அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்த வசதி கொண்டுவர இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்து, ஹரே, பெத்துன் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஒரு சில பள்ளிகளில் ஏற்கெனவே இந்த லாக்கர் வசதி அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியால் 5 கோடி மாணவர்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த புதுவித நடவடிக்கையை ஜாதவ்பூர் வித்யா பீடத்தின் தலைமை ஆசிரியர் பரிமல் பட்டாச்சார்யா வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.