t> கல்விச்சுடர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 February 2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை



ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணையை வழங்கினார்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

 அதில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரத்து 503 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விதமாக 9 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணையை வழங்கினார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

JOIN KALVICHUDAR CHANNEL